Mobile

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் !!

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த  ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மூன்று வித நிறங்களில் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  6.44 இன்ச் அளவு டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும்  அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் !!

மேலும் இது நைட் மோட், ரீடிங் மோட், வீடியோ என்ஹன்சர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.  மேலும் இது குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G Soc வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பிரைமரி கேமரா, செல்ஃபி கேமரா போன்றவற்றினையும்  முன்புறத்தில் டூயல் கேமராவினையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டு மூன்று வகையான மாடல்களில். அதாவது 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது மெய்ஸூ 17 மற்றும் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil

விரைவில் களம் இறங்க ரெடியாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ12!

TechNews Tamil

ரூ.2000 வரை விலைகுறைப்பு செய்யப்பட்ட iQOO 3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil