Mobile

சீனாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியினையும் அட்ரினோ 620ஜிபியு வசதியும் கொண்டதாக உள்ளது.

சீனாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது. கேமராவினைப்பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி சோனி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவறினையும், மேலும் 32எம்பி, 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டதாக கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகத் தயாராக உள்ள ரெட்மி நோட் மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜூலை 17ம் தேதி Redmi K20 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil