Mobile

ஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

ஸ்விட்ஸ்ர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளதாகவும், மேலும் அட்ரினோ 610 GPU, 6 ஜிபி LPDDR4x  ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5 கொண்டுள்ளதாக உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

நவம்பர் மாதம் வெளியாகும் Realme X2 Pro!!

TechNews Tamil

1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil