Mobile

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 2எம்பி மோனோ லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


Related posts

இந்தியாவில் வெறும் ரூ.23,999 விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ!

TechNews Tamil

ஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு

TechNews Tamil

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

TechNews Tamil