ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேண்ட்டினை இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் பேண்ட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேண்ட் கருப்பு வண்ணத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்பேண்ட் ஜனவரி 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் பேண்ட் 126×294 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், 1.1 அங்குல் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஒன்பிளஸ் பேண்ட் ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற அனைத்துவகையான உடற்பயிற்சிகளையும் கணக்கிடுவதாக உள்ளது.
மேலும் வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்தினைப் பொறுத்தவரை ஐபி68 மற்றும் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ட் வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 14 நாட்கள் சார்ஜ் நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இதய துடிப்பினைக் கண்காணிப்பதாகவும், ஒழுங்கற்ற சுவாசத்தின்போது எச்சரிக்கும் அம்சத்தைக் கொண்டதாகவும் உள்ளது.
ஒன்பிளஸ் பேண்ட் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும் எனவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது ப்ளூடூத் வி5.0 இணைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் இது 100 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 14 நாட்கள் கொண்டதாக உள்ளது.