மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் கசிந்துள்ள தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 20எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 1080 x 2040 பிக்சல் தீர்மானத்துடன் எஃப்.எச்.டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 401 பிபி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்றவற்றை கொண்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை அண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.