Mobile

விரைவில் வெளியாகத் தயார் நிலையில் உள்ள ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் மேலும் 120Hz refresh rate வசதியை கொண்டதாகவும் உள்ளது.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

விரைவில் வெளியாகத் தயார் நிலையில் உள்ள ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

செப்டம்பர் 5 முதல் ரியல்மி க்யூ-சீரிஸ்!

TechNews Tamil

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

நாளை மறுநாள் இந்தியாவில் வெளியாகவுள்ள லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்!

TechNews Tamil