Mobile

மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போனை மார்ச் மாதம் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது. மெமரி அளவு என எடுத்துக் கொண்டால் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் கேமரா அளவாக 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா உட்பட மூன்று கேமராக்கள் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

சிப்செட் வசதியினைப் பொறுத்தவரையில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு எனக் கொண்டால் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வார்ட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

Related posts

அறிமுகமானது ஹூவாய் நோவா 7ஐ!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கியுள்ள கேலக்ஸி எஸ்20!!

TechNews Tamil

IFA 2019 அறிமுக நிகழ்வில் வெளியாகும் நோக்கியா 7.2!

TechNews Tamil