Mobile

நோட்டிபிகேஷன் வரும்போது பேக் பேனல் நிறத்தை மாற்றும் ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, தற்போது அதன் பேக் பேனலில் அதிக அளவில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த கான்செப்ட் போனைப் பொறுத்தவரையில் பேக் பேனல் ரியாக்டிவ் சென்சிங் என்ற தொழில்நுட்பத்தின்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த தொழில்நுட்பம் பேக் பேனல் நிறத்தை டார்க் புளூவில் இருந்து சில்வர் நிறத்திற்கு தானாக நோட்டிபிகேஷன் வரும்போது மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இதில் உள்ள பிரீத்திங் மாணிட்டர் எனும் அம்சம், பயனர்கள் மூச்சுவிடும்போது அதன் பேக் பேனல் நிறத்தை மாற்றுவதாக உள்ளது.

நோட்டிபிகேஷன் வரும்போது பேக் பேனல் நிறத்தை மாற்றும் ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டதாகவும் இருக்கும்.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரையில் அட்ரினோ 650 GPU, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்றவற்றினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டு இருக்கும் என்றும், கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி, யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு இருக்கும் என்றும் 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Related posts

ரூ. 12,490 விலையில் விற்பனைக்கு வந்த LG W30 Pro!

TechNews Tamil

சீனாவில் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

Mi Super Sale.. ஆஃபர் விலையில் Redmi ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil