Mobile

மார்ச் மாதம் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ!

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மார்ச் மாதம் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ!

ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமராக்களைக்  கொண்டுள்ளது, மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராக்களைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மார்ச் 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் ஜியோமியின் Mi Note 10!

TechNews Tamil

அறிமுகமானது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil