Mobile

அசரவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்!!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதன் ஒன்பிளஸ் 8  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

1.    ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வகையின் விலை- (இந்திய மதிப்பில்) ரூ. 53,100

2.    ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வகையின் விலை- (இந்திய மதிப்பில்) ரூ. 58,345

 இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8  ஸ்மார்ட்போன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

அசரவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 650 GPU வசதியினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை  8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமராவினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

களமிறங்கத் தயார் நிலையில் கேலக்ஸி எஸ்20!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமான 3 ஒப்போ சீரியஸ் போன்கள்!

TechNews Tamil

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil