ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில், அதன் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் விலையானது ரூ. 37,999 என்று விலை நிரணயம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 28 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
1. ஒன்பிளஸ் 7டி 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் வேரியண்ட்- ரூ. 37,999
2. ஒன்பிளஸ் 7டி 8 ஜிபி ரேம் + 256 ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் வேரியண்ட் – ரூ.39.999

இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா வலைதளம் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை ஆகவுள்ளது.
இந்த விற்பனையின்போது கூடுதலாக 1 வருடத்திற்கான வாரண்டி, மேலும் இதனுடன் பல சலுகைகள் கொண்ட, OnePlus Care loyalty என்ற திட்டமும் அறிமுகமாகியுள்ளது.
அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்ற நோக்கில் இந்த OnePlus Care loyalty திட்டத்தினை அறிவித்துள்ளது ஒன் பிளஸ் நிறுவனம்.