2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஏறக்குறைய ஒரு வருடங்கள் கழித்து தற்போது கோரல் ஆரஞ்ச் என்ற வேரியன்ட்டை வெளியிட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹூலியோ ஜி90 SoC பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP அல்ட்ரா மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் கேமரா உள்ளன. இதே போல், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமராவினைக் கொண்டு உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப் சி, 4,500 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜர் போன்றவற்றினைக்
கொண்டுள்ளது.