ஒன்பிளஸ் நிறுவனம் மொபைல் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். மொபைல் போன் உற்பத்தியில் சிறப்பான இடத்தில் இருந்துவரும் ஒன்பிளஸ் நிறுவனமானது என்எப்சி அடிப்படையிலான மொபைல் பணப்பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது, அதனுடன் கூடுதலாக டிஜிட்டல் வாலட் சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பணப்பரிமாற்ற சேவையானது முதற்கட்டமான சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது. அதாவது இந்தப் பணப்பரிமாற்ற சேவைக்கு ஒன்பிளஸ் பே என்பது பெயராகும்.
ஒன்பிளஸ் நிறுவனமானது ஏறக்குறைய ஒரு ஆண்டுகளாக ஒன்பிளஸ் பே சேவையை அறிமுகம் செய்யவுள்ளது குறித்து அறிவித்து வந்தது.

ஒன்பிளஸ் பே சேவையை டிஃபால்ட் NFC அடிப்படையிலான பேமெண்ட் என்று தேர்வு செய்ய வேண்டும், அடுத்து நமது வங்கி விவரங்களை உள்ளிட்டுப் பயன்படுத்த வேண்டும். இந்த
ஒன்பிளஸ் பே சேவையானது பேடிஎம், கூகுள் பே போன்றவற்றினை விட மிகவும் எளிமையான செயல்முறை கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் பே சேவையைப் பயன்படுத்தப் பயனர்கள் இரண்டு முறை பட்டனை அழுத்துவதன் மூலம் விரைவாக பணம் செலுத்த முடியும். இந்த ஒன்பிளஸ் பே சேவையானது மே மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.