மார்வெல் ஹீரோவும், ஒன் பிளஸ் நிறுவன விளம்பர தூதருமான ராபர்ட் டவுனி ஜூனியர், ஒன் பிளஸ் 7 குறித்து வெய்போ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர், ஒன் பிளஸ் விளம்பர தூதராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஒன் பிளஸ் போன் குறித்து வெய்போ பக்கத்தில் தனது மொபைலில் இருந்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தான் அவர் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

அப்படி ஒரு பதிவால் அவர் என்ன சிக்கலை சந்தித்தார்
என்கிறீர்களா? அவர்
பயன்படுத்திய மொபைல் ஒன் பிளஸ் இல்லை என்பது தான் சிக்கலுக்கான காரணம். தனது
மொபைலில் இருந்து வெய்போவில் பதிவு செய்தவர்,
அந்த
பதிவில் தான் எந்த மொபைலில் இருந்து பதிவு செய்கிறோம் என்பதும் பதிவாகியுள்ளது
என்பதை அவர் கவனிக்கவில்லை. அந்த பதிவில் அவர் ஹூவாய் p30
ப்ரோவில்
இருந்து பதிவு செய்ததாக காண்பிக்கிறது.
இந்த பதிவை வெளியிட்ட சில நிமடங்களில், கழுகு பார்வை கொண்ட நெட்டிசன்களின் படியில் அவர் சிக்கிக்கொண்டார். உடனடியாக அவர் பதிவை நீக்குவதற்குள் அந்த பதிவை அவர்கள் ஸ்கிரின்ஷாட் செய்துள்ளனர்.
ஒன் பிளஸ் விளம்பர தூதரான ஒருவர் வேறு நிறுவனத்தின் போனை
பயன்படுத்தியது வெளியே தெரிவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு
முன்னதாக, கடந்த
வருடம் சாம்சங் நைஜேரியாவை சார்ந்த குழுவினர், கேலக்ஸி நோட் 9 குறித்த ட்விட்டர்
பதிவை ஆப்பிள் ஐ-போன் பயன்படுத்தி பதிவு செய்து இதுபோன்ற சிக்கலை சந்தித்தனர்.
எனினும், ராபர்ட் டவுனி ஜூனியர் வெய்போ பக்கத்தில் இருந்து, அவருக்கு பதில் வேறு யாரேனும் இந்த பதிவை வெளியிட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.