Mobile

ஆகஸ்ட் 28-ல் ஓப்போ ரெனோ 2, ரெனோ 2Z மற்றும் ரெனோ 2F!

ஒப்போ ரெனோ 2 தொடர் ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 28  அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 ஒப்போ ரெனோ 2 தொடரின் கீழ் வெளியாகும் மூன்று ஸ்மார்ட்போன்களுமே க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 20 எக்ஸ் ஸூம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில், 93.1% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 20: 9 என்கிற திரை விகிதம் கொண்ட 6.5 அங்குல AMOLED டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Under-display fingerprint ஆதரவை கொண்டிருக்கும் இதன் டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 6 மூலம் பாதுகாக்கப்படலாம். 

ஆகஸ்ட் 28-ல் ஓப்போ ரெனோ 2, ரெனோ 2Z மற்றும் ரெனோ 2F!

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 730G SoC மூலம் சக்தியூட்டப்படலாம். 8ஜிபி தவிர்த்து இன்னும் சில மெமரி வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

ரெனோ 2 ஆனது ரூ.35,000/-க்கு கீழ் எங்காவது ஒரு புள்ளியை எட்டலாம். ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.0.1 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அதன் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்டை உறுதியளிக்கலாம். 



டிஸ்பிளேவின் கீழ் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உடனான மீடியாடெக் ஹீலியோ பி 90 ப்ராசஸர் போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருக்கலாம். 


இது ரூ.25,000/- என்கிற பிரிவின் கீழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கேமராத்துறையை பொறுத்தவரை, இது 48 மெகாபிக்சல் + அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்களை கொண்டிருக்கலாம்.

ஒப்போ ரெனோ 2 எஃப் பற்றி அதிகம் தெரியவில்லை. இது சாம்சங் நிறுவனத்தின் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை முதன்மை கேமராவாக பெறலாம். இது ரூ.20,000/-க்கு கீழே எபிகிற விலை நிர்ணயம் பெற அதிக வாய்ப்புள்ளது. 

Related posts

அதிரடி விலைக்குறைப்பில் Oppo A5 2020!

TechNews Tamil

பப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil