கொரோனா நோய்த் தொற்றின் தீவிரம் ஓரளவு குறைந்துள்ள நிலையில், நோய் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு குறித்த தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓலா, உபர் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது, இதுகுறித்த தகவல்களை ஓலா, உபர் நிறுவனங்கள் ஆன்லைனில் அறிவித்துள்ளன.
உபர் சேவைகளை பல விதமான நிபந்தனைகளுடன் துவக்கியுள்ளது. அதாவது கார் அல்லது ஆட்டோ என எதுவாக இருந்தாலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கார் அல்லது ஆட்டோ எதுவாக இருந்தாலும் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றோர் தக்க பாதுகாப்புடன் மட்டுமே பயணிக முடியும். கொரோனா மேலும் பரவாமல் தடுப்போம் என்ற உறுதியுடனேயே இந்த சேவை துவக்கப்படுவதாய் அறிவித்துள்ளனர்.
ஓலா தரப்பில் கூறப்பட்டதாவது, “நாட்டில் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் எங்கள் சேவையானது துவங்க உள்ளது, ஓலா கேப்ஸ், ஓலா ஆட்டோ மற்றும் ஓலா பைக் திங்கள் முதல் அந்த பகுதிகளில் செயல்படும்.
ஓலா ஓட்டுநர்கள் முகமூடிகள், கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு சவாரிக்கு பின்னர் வண்டிகள் சானிட்டசைர் கொண்டு தெளிக்கப்படும்.
பயணிகள் முகமூடி அணிந்துள்ளதையும், சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிப்பதும் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. பயணிகள் முகமூடி அணிந்துள்ளதையும், வண்டியில் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த செல்பி எடுத்து அனுப்ப வேண்டியது அவசியமாகும். ஏ.சி.க்கள் இயங்காது, அதற்குப் பதில் ஜன்னல்கள் திறந்து வைக்கப்படும்.