Gadgets

அதிரடியான நண்பர்கள் தின பரிசுகளுக்கான சலுகைகள்!

உங்களின் நண்பருக்கு ஒரு Fitness Freak என்றால் அவருக்கு Mi Band-ஐ பரிசளிக்கலாம். ரூ.1299/-க்கு வாங்க கிடைக்கும் இந்த மி பேண்ட்டின் HRX edition ஆனது IP67 Water-resistant மற்றும் OLED டிஸ்பிளேவை கொண்ட ஒரு Decent ஆன Smart Band ஆகும். 


இந்த பேண்ட், தினமும் நீங்கள் எத்தனை கலோரிகளை எரித்துள்ளீர்கள், எவ்வளவு தூரம் மற்றும் எத்தனை அடிகள் நடந்துளீர்கள் என்பதை கண்காணிக்க உதவும். இதன் ஐடியா அலெர்ட்ஸ் மற்றும் Gentle buzz அம்சமானது நீங்கள் நீண்டன நேரம் அமர்ந்தே இருக்கும் பட்சத்தில் Alert-களை வழங்கும். இந்த மி பேண்ட் ஆனது ப்ளூடூத் 4.0 ஆதரவை கொண்டுள்ளதால் இதனை எளிமையாக ஒரு ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும். 


உங்கள் நண்பர் இசைப்பிரியராக இருப்பின், அவருக்கு JBL GO Portable Wireless ப்ளூடூத் ஸ்பீக்கரை பரிசாக வழங்கலாம். 

அதிரடியான நண்பர்கள் தின பரிசுகளுக்கான சலுகைகள்!


இந்த ஸ்பீக்கர் பிரத்யேக கூகுள் அசிடென்ட் மற்றும் சிரி பொத்தானை கொண்டுள்ளது. சுமார் 5 மணிநேரம் வரையிலான பேட்டரி ஆயுளை வழங்குகிறது. உயர்தர ஒலியை வயர்லெஸ் முறையில் ஸ்ட்ரீம் செய்யும் இந்த சாதனம் இசை ஆர்வலர்களுக்கு சரியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அமேசான், ஸ்னாப்டீல் அல்லது ப்ளிப்கார்ட்டிலிருந்து பல வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்பீக்கரின் விலை ரூ. 1499/- ஆகும். 


எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கும் நண்பர்களுக்கு Lenovo 10400mAH Lithium-ion Power Power Bank PA10400-ஐ பரிசளித்து அசத்தலாம். 


இது கைக்கு அடக்கமான ஒரு சிறிய வடிவமைப்பை கொண்டுள்ளதால் எளிமையாக எங்கும் எடுத்து செல்லலாம். ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் Dual output USB ஆதரவு வழங்கும் இந்த பவர் பேங்க் ஆனது ஒரு வருட உத்தரவாதத்துடன் வாங்க கிடைக்கிறது. இதன் விலை ரூ.599/- ஆகும். 


இசைப்பிரியர்களுக்கான மற்றொரு சிறப்பான நண்பர்கள் தின பரிசாக Sennheiser CX 275 S In-Ear Universal Mobile Headphone திகழ்கிறது. 


தேவையான வசதியை வழங்கும் நோக்கத்தின் கீழ், இது வெவ்வேறு அளவிலான Ear adaptors-களை கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் சர்வதேச உத்தரவாதத்தை வழங்கும் இந்த ஹெட்போனின் விலை ரூ.1549/- ஆகும். 


Related posts

மலிவான விலையில் 4 புதிய Mi டிவிக்கள் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ள அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாக உள்ளது WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போன்!!

TechNews Tamil