சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது 2000 வரை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ரெட்மி கே20 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.25,999 (1000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.24,999
2. ரெட்மி கே20 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ. 27,999 (1000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.25,999

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.
இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி ரியர் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இதேபோல் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொருத்தவரை 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.