வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது, மேலும் இது தீபாவளி பண்டிகைக்காக சில சலுகைகளை அறிவித்து இருந்தது.
ஜியோ போனுக்கான தீபாவளி 2019 சலுகையை, ஜியோ கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அந்த பண்டிகை கால சலுகையை, இப்போது நவம்பர் 2019 வரை நீட்டித்துள்ளது.
மேலும் இதனுடன் கூடுதலாக சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களையும் நீட்டித்துள்ளது. ரூ.800 விலைக்கு ஒரு ஜியோ போன் + 1 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும். ரூ.1000 விலைக்கு ஒரு ஜியோ போன் + 3 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.

ரூ.1500 விலைக்கு ஒரு ஜியோ போன் + 8 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.
ரூ.2000 விலைக்கு ஒரு ஜியோ போன் + 11 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.
இந்த போன் 2.4 இஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது, 1.2GHz
dual-core processor கொண்டு இயங்குகிறது.
இது 4GB உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது Wi-Fi இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 2,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது