Mobile

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட நுபியா Z20!

ZTE நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன நுபியா அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன Nubia Z20 -ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான நுபியாவின் UI 7.0 உடனாக சமீபத்திய ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் வழக்கமான டிஸ்பிளேவையும், பின்பக்கத்தில் இரண்டாம் நிலை டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. 



Nubia Z20 ஸ்மார்ட்போனின் இரண்டு பக்க டிஸ்பிளேக்களுமே தனித்தனியாக இயங்கும், அதாவது ஒரே நேரத்தில் இருவேறு விதமான ஆப்ஸ்களை முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் பயன்படுத்தலாம்.


நுபியா Z20 ஸ்மார்ட்போனின் பிரதான திரை ஆனது, ஒரு வளைந்த 6.42-inch FHD+ AMOLED பேனல் ஆகும்.

பின்புறத்தில் உள்ள டிஸ்பிளே ஆனது ஒரு 5.1 இன்ச் HD+ AMOLED பேனல் என்பதால், மீதமுள்ள இடமானது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதை பின்பக்க கேமராவாக மட்டுமென்றி, செல்பீ கேமராகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட நுபியா Z20!

கேமராத்துறையை பொறுத்தவரை, சோனி ஐஎம்எக்ஸ் 585 சென்சார் மற்றும் ஓஐஎஸ் உடனான 48MP கேமரா + 16MP அளவிலான ultrawide angle கேமரா + 8MP அளவிலான 3X optical zoom உடனான Telephoto கேமரா எனும் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. கேமராக்களுக்கு துணையளிக்கும் வண்ணம் இரட்டை எல்இடி ஃபிளாஷ் உள்ளது. இது 8K ரெசல்யூஷன் அளவிலான வீடியோவை எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.


முன்னர் குறிப்பிட்டபடி, Z20 ஆனது Qualcomm Snapdragon 855+ SoC உடனான 6GB அல்லது 8GB RAM மற்றும் 128 அல்லது 512GB UFS 3.0 ஸ்டோரேஜ் கொண்டு இயங்குகிறது. மேலும் 27W Fast Charging ஆதரவு கொண்ட 4,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை ஆனது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




Related posts

இந்தோனேசியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15 Holiday எடிஷன் அறிமுகம்!

TechNews Tamil

இன்று அறிமுகமானது ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் விலைப்பட்டியல் இதோ!!

TechNews Tamil