நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்பெயினில் மார்ச் மாதம் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலகச் சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசசர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகா பிக்சல் கேமரா, முன்புறத்தில் 8 மெகாபிக்ஸல் கேமரா, இரு 2 மெகா பிக்சல் கேமரா போன்றவற்றினை என மொத்தமாக 4 கேமராக்களைக் கொண்டுள்ளது.

நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 240 ஹெர்ட்ஸ் டச் செட்டிங் கொண்டதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜிபி இன்பீல்ட் மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
நூபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் 5100 ஆம்ப் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.