Mobile

விற்பனையைத் தொடங்கிய Nubia Red Magic 3S!

Nubia Red Magic 3S கேமிங்-சென்ட்ரிக் போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கட்டணமில்லாத EMI, கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடி போன்ற பல ஆஃபர்களை பிளிப்கார்ட் வழங்கி வருகிறது.

  1. Nubia Red Magic 3S இன் 8GB RAM + 128GB வகையின் விலை – 35,999
  2. Nubia Red Magic 3S இன் 12GB RAM + 256GB வகையின் விலை- ரூ. 47,999

எக்ஸ்சேஞ் தள்ளுபடியானது ரூ. 10,800 வரை கிடைக்கும் என்று தெரிகிறது.

விற்பனையைத் தொடங்கிய Nubia Red Magic 3S!


இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.65 இஞ்ச் full-HD டிஸ்பிளேவுடன் 1080×2340 பிக்சல்கள் உடன் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இது 2.5D கார்னிங்க் கிளாஸ் கொரில்லா பாதுகாப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. இது Qualcomm Snapdragon 855+ SoC கொண்டு இயங்குகிறது. 

இது 48 மெகாபிக்சல் சோனி IMX586 சென்சார், single rear கேமரா அமைப்பு போன்றவையும் உள்ளது.

முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி சென்சார் போன்றவையும் உள்ளது. 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C போன்ற இணைப்பு ஆதாரங்களை கொண்டுள்ளது. இது fingerprint சென்சார் கொண்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்17 ப்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 7 முதல் விவோ எஸ்1 விற்பனை ஆரம்பம்.!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நோவா 7ஐ!

TechNews Tamil