நுபியா பிராண்ட் தற்போது நுபியா பிளே ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
நுபியா பிளே ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- இந்திய மதிப்பில் ரூ.29,280
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா பிளே ஸ்மார்ட்போனின் விலை- இந்திய மதிப்பில் ரூ.32,535
நுபியா பிளே ஸ்மார்ட்போன் 6.65 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினையும், இது, 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

நுபியா பிளே ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு கொண்டதாகவும், 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதி கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை நுபியா பிளே ஸ்மார்ட்போன் 6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 12எம்பிசெல்பீ கேமராவினை முன்புறத்தில் கொண்டுள்ளது. நுபியா பிளே ஸ்மார்ட்போன் 5100எம்ஏஎச் கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5, 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை801.11 ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவினைக் கொண்டுள்ளது.