நோக்கியா 1100 என்ற மாடலில் தொடங்கி இன்றுவரை சிறப்பான தரத்தை வழங்குகிறது. தரத்திற்குப் பெயர்போன நோக்கியா ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தபோது முதலில் சற்று வியாபார ரீதியாக பின் தங்கியிருந்தாலும், தரத்தின் காரணமாக முன்னிலை வகித்து வருகிறது.
நோக்கியா நிறுவனம் 9 ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அறிவிக்கப்பட்டது.

இதில் பின்பக்கத்தில் ஐந்து கேமரா உள்ளதாக தகவல் பெரும் எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியது. இதன் விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் nokia.com மற்றும் flipkart.com ஆன்லைன் ஷாப்பிங்கில் நோக்கியா 9 ப்யூர் வியூ போன் ஆன்லைன் ஷாப்பிங்கில் மட்டுமே கிடைக்கும். வரும் 17ம் தேதிக்குப் பிறகு மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும்.
தொடக்க விற்பனையாக வாடிக்கையாளர்களுக்கு சில ஆஃபர்கள், ப்ரோமொ கோட் வழங்கப்படுகிறது. மேலும், HDFC வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் நோக்கியா போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், 9,999 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 705 இயர் பட்ஸ், 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டு ஆகியவையும் வழங்கப்படுகிறது.