Mobile

15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.எம்.டு. குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா XR20 ரக்கட் ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.  இந்த நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD, 20:9 டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் என்று கொண்டால் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 8nm பிராசஸர் மற்றும் அட்ரினோ 619 GPU, 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123° அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆடியோ அளவாக 3.5mm ஆடியோ ஜாக், OZO பிளேபேக் கொண்டதாகவும் பாதுகாப்பு அம்சமாக வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68) கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகத்திற்குத் தயாரான நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிளிப்கார்ட்: ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil