மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் தற்போது அமெரிக்காவில் நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.
நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.
நோக்கியா எக்ஸ்100 4470 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.