இன்று ஒவ்வொரு இளைஞரின் கையிலும் பல வகையான ஆண்ட்ராய்டு போன்கள் வலம் வரலாம், ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு கைப்பேசி என்றாலே பலருக்கு தெரிந்த ஒன்றாக இருந்தது நோக்கியா 1100 தான்.
பட்டன் போன்களில் இருந்து காலப்போக்கில் நோக்கியாவும் ஆண்ட்ராய்டுக்கு தாவ ஆரம்பித்துவிட்டது. தற்போது பல வகையான ஆண்ட்ராய்டு போன்களை தயாரித்து சாம்சங்க், சியோமி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது.
நோக்கியா மாடல் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள நிறுவனம் எச்எம்டி குளோபல் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 2.3, அறிமுகம் செய்தது. அது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் எச்எம்டி குளோபல் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டரில் ஒரு நற் செய்தியினை பதிவிட்டுள்ளார். அதாவது, “இது #CES, #MWC நிகழ்வுகளை எதிர்பார்த்து ஆடிட்டாஸ் நிறுவனத்தில் புதிய காலணிகளை வாங்கும் நான்காவது ஆண்டு. இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இதன்மூலம் புதிய #nokia #original @nokiamobile அறிமுகம் செய்யப்படும்” என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இந்த நோக்கியா மொபைல் குறித்த விவரங்கள் ஜனவரி 25 ஆம் தேதியான சீன புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.