தகவல் தொழில்நுட்பத் துறையில், அதுவும் மொபைல் துறையின் சேவையினை இந்தியாவில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை நோக்கியாவினையே சாரும்.
அதன்பின்னர் ஆண்ட்ராய்டு வளர்ச்சி நோக்கியா போன்களுக்கு சவாலாக அமைந்தாலும், சவால்களைத் தாண்டி நோக்கியா தற்போது ஆண்டராய்டு ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
1. நோக்கியா 5.1 பிளஸ்,
2. நோக்கியா 6.1 பிளஸ்.,
3. நோக்கியா 7.1,
4. நோக்கியா 8.1

தற்போது நோக்கியா பயனர்கள் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் தவறான சார்ஜிங் போர்ட் சிக்கல்களை சந்தித்துள்ளதாக குற்றசாட்டுகளை வைத்தனர். இது பெரிய அளவில் பிரச்சினையாகத் துவங்க, நோக்கியா தற்போது பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
நோக்கியா போன்களை தயாரிக்கும் நிறுவனமான எச்எம்டி குளோபல் நோக்கியா பயனர்களுக்கு இலவச ரிப்பேர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான வாரண்டி முடிவடைந்து விட்டாலும் பயனர்கள் இந்த இலவச ரிப்பேர்களுக்கு தகுதியானவர்கள் ஆவர். இதில் ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது வாரண்டி முடிந்தவர்கள் அதன்பின்னர் 6 மாதங்களுக்குள் மட்டுமே இலவச ரிப்பேர் செய்ய தகுதி பெற்றவர்கள் ஆவர்.
மேலும் இந்த இலவச ரிப்பேர் ஆனது ஒரு முறை, இலவசமாக வழங்கப்படும். மேலும் இரண்டாவது முறையில் இருந்து கட்டணம் செலுத்துதல் வேண்டும்.