நோக்கியா தனது முதல் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தரத்திற்கு பெயர் போன இந்த நோக்கியா இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
- நோக்கியா 55 இன்ச் அளவிலான 4 கே ஸ்மார்ட் டிவி- ரூ.41,999
இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த டிவியானது 4கே யுஎச்டி ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த மென்பொருள் மற்றும் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. இந்த டிவி ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த டிவியானது நுண்ணறிவு டிம்மிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த நோக்கியா டிவி ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர் ஆதரகளைக் கொண்டதாக இருந்தது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது சிறந்த ஒலி தரத்திற்காக ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பத்தையும் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த டிவி தெகிளியர் வியூ தொழில்நுட்பம் மற்றும் கிளியர் சவுண்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.