2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரண்டு வேரியண்டில் வெளியானது. ஆரம்ப விலையாக 16,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.
வாடிக்கையாளரைக் கவர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை 6,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ள ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தையும், 5.5 இன்ச் அளவுடனும், 1080×920 பிக்சல் அளவுடனும், 630 Soc பிராசசருடனும், 3,4 ஜிபி ரேனுடனும், 32, 64ஜிபி மெமரியுடனும், 128ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரியுடனும், 3,000 mAh பேட்டரி பவருடனும் உள்ளது.
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே, 4,000 mAh பேட்டரி உள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் விலை 8,990 ரூபாய் என்று இதுவரையில் விற்கப்பட்டு வந்தது இந்த நிலையில், தற்போது இதற்கு 500 ரூபாய் குறைக்கப்பட்டு, இனி 8,490 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது.
இதே போல், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 10,290
ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது. நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் புதிய விலை 9,690 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.