மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் சிவப்பு மற்றும் ப்ளூ வண்ணங்களில் வெளியாகியுள்ளது. நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 5 எம்பி பின்புற கேமரா, முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவினைக் கொண்டதாகவும், ஒரு நாள் முழுவதும் பேட்டரியினை நீடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.