Mobile

ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, 19:5:9 விகித அளவைக் கொண்டதாக இருக்கலாம்.

மேலும் இது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குவதாக இருக்கும் என்றும் தெரிகின்றது. நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் மெமரி நீட்டிப்பாக 512ஜிபி வரை மெமரி நீடிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்!!

கேமரா என எடுத்துக் கொண்டால் நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராவுடன் 16 எம்பி கேமரா கொண்டு இருக்கும்.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் செயலி மூலம் இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆகிய அளவுகளிலும் 32 ஜிபி உள்சேமிப்பு அல்லது 64ஜிபி உள்சேமிப்பை கொண்டு இருக்கலாம்.

இது யூஎஸ்பி டைப் சிபோர்ட் போன்றவற்றினைக் கொண்டு இருக்கும் என்றும் பேட்டரி அளவாக இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.

Related posts

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பாகிஸ்தானில் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil