Mobile

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உடன் அறிமுகமானது நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன்!!

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா C5 Endi என்ற ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஹீலியோ பி 22 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உடன் அறிமுகமானது நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க வசதி கொண்டதாக உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது,  13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இந்த போன் டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவுக்கு மேலேயும் கீழேயும் ஒரு பெசல்கள் உள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 10 இயங்கு தளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஃபேஸ் அன்லாக் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் எஸ் 10 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இவ்வளவு விலைகுறைப்பா?

TechNews Tamil