Mobile

சிறப்புமிக்க அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவுட்ன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த நோக்கியா சி3  5.99 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1440 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.6GHz ஆக்டா கோர் UniSoC SC9863A செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

சிறப்புமிக்க அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசங்களைக் கொண்டதாகவும், மேலும் எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 400 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, GPS, GLONASS, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்டல் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது 8GB ரேம் கொண்ட விவோ U20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil