எச்டிஎம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாதம் அறிமுகமாகியது, தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.
1. நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை- ரூ.49,999
2. நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை- ரூ.34,999

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் ஆனது 5.99 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், 2560×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இது 12 எம்.பி.யில் ஐந்து பிரைமரி கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.