ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 8.3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை இன்று சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
1. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் இந்திய விலை -ரூ. 47,865
2. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம் இந்திய விலை – ரூ. 51,835
இந்த நோக்கியா 8.3 ஸ்மார்ட்போன் ஆனது 6.81 இன்ச் உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 எல்.சி.டி. டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்டதாகவும், மேலும் இது அட்ரினோ 620 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சாரைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 24 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
மேலும் இது 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ போன்றவற்றினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 5ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.