ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான நோக்கியா சிறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் புதிய நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது.
நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன் pOLED அல்லது LCD பேனல் போன்ற டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும், மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ரேம் மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் கேமராவைப் பொறுத்தவரை 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது மூன்று பிரைமரி கேமரா சென்சார்களைக் கொண்டுள்ளது.
மேலும், இது 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.