எச்எம்டி குளோபல் நிறுவனம், இந்தியாவில் அதன் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் மீது அதிரடி விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
நோக்கியா 8.1 ஆனது கடந்த ஆண்டு ரூ.26,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது ரூ.15,999-க்கு விலைகுறைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் இன்னொரு 6 ஜிபி ரேம் மாறுபாடும் உள்ளது, இது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.

நோக்கியா 8.1 ஆனது 6.18 இன்ச் அளவிலான PureDisplay IPS LED panel-ஐ கொண்டுள்ளது. இது 2.5 டி கர்வ்டு கிளாஸ் கண்ணாடி மற்றும் 2246 × 1080 பிக்சல்கள் அளவிலான முழு எச்டி+ தீர்மானம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC மற்றும் அட்ரினோ 616 ஜி.பீ உடனாக 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி என்கிற அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல்
அளவிலான இரண்டாம் நிலை கேமரா சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
நோக்கியா 8.1 என்பது எச்எம்டி க்ளோபலின் ஆண்ட்ராய்டு ஒன்
ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை உங்களுக்குள் வழங்கும். இது
பெட்டிக்கு வெளியே சமீபத்திய ஆண்ட்ராய்டு 9 பை கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, நோக்கியா 8,1 ஆனது
இரட்டை சிம் கார்டு இடங்கள், ப்ளூடூத், VoLTE உடன் 4G
LTE, சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றங்களுக்கான யூ.எஸ்.பி டைப்-சி
போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.