HMD குளோபல் தற்போது, நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள IFA 2019 அறிமுக நிகழ்வில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகின.
அந்த விழாவில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகிது.
நோக்கியா 7.2 ஸ்மார்டாபோனின் பின்புற கேமரா அமைப்பிற்கு கீழ், பிங்கர் பிரின்ட் சென்சார் இருக்கலாம் என்பது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரிகின்றன. மேலும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான திரையை கொண்டிருக்கும் எனவும் தெரிகிறது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் போன்றே அமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்டிருக்கும் என்பதும் கூடுதல் தகவலாகும்.
நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2, ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் செப்டம்பர் 5 நடைபெறவுள்ள IFA நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது பலருக்கும் எதிர்பார்ப்பினைக் கூட்டியுள்ளது.