எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்களுக்கு இன்று ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.
இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 5.84 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவினைக் கொண்டுள்ளது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 12 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினை பின்புறத்தில் உள்ளது.
மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.