நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்ட் 10 அப்டேட் கிடைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்த அப்டேட்டானது மே 3 ஆம் தேதிக்குள் கிடைக்கும்.
1. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.12,499

இந்த அப்டேட்டினைப் பெற நோக்கியா 6.2 போனில் Settings > About phone > System updates க்குள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஆப்ஷனை சரி பார்க்கலாம்.
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.3 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி கொண்டுள்ளது மேலும் இது ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 16எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.