Mobile

மூன்று கேமிராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2!

நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 எனும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய, நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள HMD Global நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் வெளியாகும்.

வெளியான லீக்ஸ் தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமான Nokia X 71 ஸ்மார்ட்போன் தான் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக, நோக்கியா 6.2 என்று அறிமுகமாக உள்ளது.


நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகிய இரண்டுமே Triple Camera அமைப்பை (மூன்று பின்புற கேமராக்கள்) கொண்டிருக்கும் என்றும், ஆனால் அவைகள் வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும் என்றும் வெளியான லீக்ஸ் தகவல் குறிப்பிட்டுள்ளது. 

மூன்று கேமிராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2!

வெளியான Nokia Power User-ன் அறிக்கையின்படி, நோக்கியா 6.2 ஆனது 6 இன்ச் முழு எச்டி+ (1080 x 2280 பிக்சல்கள் அளவிலான) AMOLED டிஸ்ப்ளே, 13MP செல்பீ கேமரா, 20MP அளவிலான பிரதான பின்பக்க கேமராவுடனான 8MP அளவிலான இரண்டாம் நிலை மற்றும் 5MP அளவிலான மூன்றாம் நிலை கேமரா என மொத்தம் மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டிருக்கும், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி அத்துணை கேமராக்களுமே Carl Zeiss optics-ஐ கொண்டிருக்கும். 

இதற்கு முன்னதாக வெளியான தகவலானது கூறப்படும் Nokia 6.2 ஆனது முன்னர் வெளியான Nokis X 71-ஐ போலவே 48MP அளவிலான முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.

மேலும் இம்மாத தொடக்கத்தில் லீக் ஆன Nokia ‘Daredevil’ எனும் பெயர்கொண்ட ஸ்மார்ட்போன் ஆனது Nokia 6.2 தான் என்றும், அது Snapdragon 660 SoC கொண்டு இயக்கப்படும் என்றும், 6 ஜிபி அளவிலான RAM மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 


Related posts

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.92,999 என்று விலை நிர்ணயமான கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil