Mobile

விற்பனையினைத் துவக்கிய நோக்கியா 5310 போன்!!

நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வந்தாலும் பேஸிக் மொபைல்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் நோக்கியா நிறுவனம் அதன்  5310 பேசிக் மாடல் மொபைல் போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது.

அந்தவகையில் தற்போது இந்த போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நோக்கியா போன் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு வெளியான 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.

 நோக்கியா 5310 போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த நோக்கியா 5310 போன் சீரிஸ் 30 மற்றும் இயக்க முறைமையைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.4 அங்குலத்துடன் QVGA உடனான 240×320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

விற்பனையினைத் துவக்கிய நோக்கியா 5310 போன்!!

இந்த போன் மீடியாடெக் MT6260A SoC கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை இது 8MB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது. இந்த போன் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியதாக உள்ளது.

16MB ஆன் போர்டு சேமிப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பொறுத்தவரை, நோக்கியா 5310 இன் பின்புறத்தில் விஜிஏ கேமரா கொண்டதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் வி 3.0, மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. நோக்கியா 5310 வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ சப்போர்டைக் கொண்டுள்ளது.

Related posts

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட நுபியா Z20!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!

TechNews Tamil

அறிமுகமானது விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil