மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் விரைவில் மலேசியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் 720×1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 11nm பிராசஸர் மற்றும் அட்ரினோ 610 GPU கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரையில் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.