மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்எம்டி குளோபல் நிறுவனம் டிசம்பர் மாத இறுதிக்குள் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கும், மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும்.
மேலும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியினைக் கொண்டு இருக்கும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டு இருக்கும்.
மேலும் இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது, நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.
மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டு இருக்கும். மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் கொண்டு இருக்கும்.