Mobile

சீனாவில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

எச்டிஎம்ஐ குளோபல் நிறுவனம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. தற்போது ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் சீனாவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளதாகவும், மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது .

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் அட்ரினோ 610ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

சீனாவில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது, நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil

அறிமுகமானது மேம்பட்ட அம்சங்களுடன் லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மீண்டும் விற்பனைக்கு வந்த OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil