Mobile

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா நிறுவனம் கீ பேர்டு மொபைலில் வலுவாக கால் பதித்து இருந்த நிலையில், சில வருடங்களாக ஆண்ட்ராய்டு மொபைல்களையும் தயாரித்து வருகிறது.

நோக்கியாவுக்கே என்றே பல வாடிக்கையாளர்கள் காலம் காலமாக உள்ளனர். இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையானது பட்ஜெட் விலையில் இருப்பதால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றது.

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் வகையின் விலை – ரூ. 13,300

அடுத்த வாரம் வெளியாகவுள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!!

இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும், கேமராவைப் பொறுத்தவரை டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்  மெமரியினைப் பொறுத்தவரை 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related posts

ரூ.13,300 விலையில் அறிமுகமானது நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விற்றுத் தீர்ந்த Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஜியோமி போன்கள்.!!

TechNews Tamil