Gadgets

ஜூன் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

நோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவியினை ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த 43 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா டிவியானது மார்ச் மாதம் வெளியாகவிருந்த நிலையில், ஊரடங்கால் தாமதமானது. மேலும் இந்த டிவியானது உலகச் சந்தையில் ஜூன் 2 வது வாரம் வெளியாகவுள்ளது.

நோக்கியாவின் 43 இஞ்ச் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 43 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும், மேலும் இரண்டு 12W ஸ்பீக்கர்கள் கொண்டதாகவும் இருக்கும்.

ஜூன் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

மேலும் கூடுதல் இணைப்பாக நெட்ஃபிக்ஸ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோ செயலி ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியானது புளூடூத் 5.0 ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் நோக்கியாவின் 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவிக்களில் ஜேபிஎல் ஆடியோ மற்றும் டால்பி விஷன் ஆதரவும் உள்ளது. இது ஏற்கனவே டிசம்பர் மாதம் வெளியான நோக்கியாவின் 55 இஞ்ச் ஸ்மார்ட் டிவியினைப் போல் சிறப்பான ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

Related posts

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil

விற்பனைக்கு வரவுள்ள ஐபேட் 2019!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது ஹெச்பி லேப்டாப்!

TechNews Tamil