Gadgets

ஜூன் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 43′ இன்ச் ஸ்மார்ட் டிவி!!

எச்எம்டி குளோபல் தனது மற்றுமொரு ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட் டிவி 43′ இன்ச் குறித்த சில விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த நோக்கியா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது 4K எச்டிஆர் எல்இடி டிஸ்ப்ளே 3840 x 2160 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டதாகவும் உள்ளது.

ஜூன் 4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 43' இன்ச் ஸ்மார்ட் டிவி!!

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் காமெட் தொழில்நுட்பம் கொண்டதாகவும் உள்ளது. நோக்கியா ஸ்மார்ட் டிவி மெலிதான பெசல்கள் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த டிவியானது சாலிட் குரோம் பெடெஸ்டல்ஸ் கொண்டதாகவும் ஆடியோவைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் டிவி ‘டீப் பாஸ் டோன்கள், குறைந்தபட்ச ஹார்மோனிக் விலகல், கிரிஸ்டல் கிளியர் வோக்கள் டியூன் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி ஆடியோவினைப் பொறுத்தவரை டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் சவுண்ட் அனுபவம் கொண்டதாக உள்ளது, இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி அண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

பேம்பர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘ஸ்மார்ட் டயப்பர்’

TechNews Tamil

ஃபிட்னஸ் பிரியர்களுக்கான ப்ரத்யேக Amazfit T-Rex ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!!

TechNews Tamil